ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா Shigeru Ishiba விடுத்த அழைப்பின்பேரில், ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராஜஸ்தானியர்களாக மாறிய ஜப்பானிய பெண்கள், பாரம்பரிய ஆடைகளை அணிந்தபடி நாட்டுப்புறப் பாடலுடன் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர். இதைக்கேட்டு பிரதமர் மோடி கைதட்டி மகிழ்ந்தார்.