இன்றைய டாப் 10 செய்திகள் (24.08.2025) | Thanthi TV

Update: 2025-08-24 17:46 GMT

தமிழ்நாட்டின் கலாச்சாரம் தனித்துவம் வாய்ந்தது என்று

இந்தியா கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்தார். தொலைநோக்கு பார்வையிலும், இலக்கை நிர்ணயிப்பதிலும் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக திகழ்வதாகவும் கூறினார். சமூகநீதி கொள்கையிலும் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக சுதர்சன் ரெட்டி தெரிவித்தார். தாம் எண்ணற்ற தீர்ப்புகளை வழங்கியுள்ளதாகவும், தனக்கு நீங்கள் தீர்ப்பளிக்கும் நேரம் வந்திருப்பதாகவும் கூறினார். தனக்கு வாய்ப்பளித்தால் அரசியலமைப்பை பாதுகாப்பதில் முழுமையாக போராடுவேன் என்றும் சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்