இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, மிகவும் தகுதி வாய்ந்த வேட்பாளர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவை என்றும், புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான தமிழ்நாட்டின் உணர்வுகளை வெளிப்படுத்தியவர் என்றும் கூறினார். 60 ஆண்டு கால வாழ்க்கையை சட்டம், நீதி போன்றவற்றுக்காக செலவழித்தவர் என்றும், சமூகநீதியை காக்கும் வகையில் சுதர்சன் ரெட்டி தனது பணியில் பங்களிப்பை செலுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.