Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27.11.2025) | 7 PM Headlines | ThanthiTV
- சென்னையிலிருந்து 670 கி.மீ தொலைவில் 'டிட்வா' புயல் நிலை கொண்டுள்ளது... மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகரும் டிட்வா புயல், வரும் 30ஆம் தேதி வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது..
- நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது... 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு.. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
- தமிழகத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்... தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்...
- ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்கு NDRF குழுக்கள் தயார் நிலையில் உள்ளது... 300 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...