Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.11.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-11-18 00:42 GMT
  • வங்க கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி புதிதாக உருவாகும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது... வடமேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.... சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • பணி நெருக்கடி காரணமாக, SIR பணிகளை இன்று முழுமையாக புறக்கணிப்பதாக, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. SIR பணிகளால் கடுமையான பணி நெருக்கடி, மன உளைச்சல் ஏற்படுவதாகவும் வருவாய்த்துறை சங்கம் கூறியுள்ளது.
  • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்பு, இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தும் நிலையில், தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
  • SIR தொடர்பான கணக்கீட்டு படிவம் நிரப்புவதில் எழும் சந்தேகங்கள் குறித்து விளக்க சென்னையில் இன்று முதல் உதவி மையங்கள் செயல்பட உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்