Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.12.2025) | 6 PM Headlines | ThanthiTV
- சென்னை மற்றும் திருவள்ளூருக்கு, இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது...
- சென்னையில் காலையில் இருந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது... கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மெட்ரோ ஸ்டேஷன் சாலையில் 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன....
- சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது... வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்...
- தொடர் மழையால் சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை, லெட்டாங்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது... மக்கள் அவதி அடைந்து வரும் நிலையில், நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்...
- கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலையில் மழை நீருடன் தொழிற்சாலைகளின் கழிவுநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்... பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீர் வடிய வைத்ததால் போக்குவரத்து சீரானது...
- சென்னை புரசைவாக்கம் தானா தெருவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்... மழைநீர் தேங்காமல் இருக்கு நடவடிக்கை எடுக்குமாறு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்...