இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (26.07.2025) | 7 PM Headlines | ThanthiTV

Update: 2025-07-26 14:34 GMT

பிரதமர் பயணிக்கும் ஹெலிகாப்டர் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தது...

2 நாள் சுற்றுப்பயணமாக இன்று இரவு 7.50 மணிக்கு தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி...

தூத்துக்குடியில், விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்து, கங்கை கொண்ட சோழபுரம் செல்கிறார்....

மொத்தம் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி....

ரயில்வே துறையில் ஆயிரத்து 30 கோடி மதிப்பிலான பணிகளையும், நெடுஞ்சாலைத்துறையில் 2 ஆயிரத்து 571 கோடி மதிப்பிலான பணிகளையும் தொடங்கி வைக்கிறார்..

பிரதமர் வருகையையொட்டி, தூத்துக்குடி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு...

11 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 100 போலீசார் பாதுகாப்பு பணி...

பிரதமர் வருகையையொட்டி, தூத்துக்குடி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு...

11 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 100 போலீசார் பாதுகாப்பு பணி...


கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரின் பெயர் வெளியீடு...

கைதானவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த 28 வயதான ராஜு பிஸ்வ கர்மா என போலீசார் தகவல்...

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்டது குறித்து போலீசார் விளக்கம்...

மதுபானக்கடைக்கு சென்றுவிட்டு ரயில் ஏற வந்தபோது சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து கைது செய்ததாக தகவல்...

நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு...

நெல்லை, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

Tags:    

மேலும் செய்திகள்