இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26.07.2025) | 11 PM Headlines | ThanthiTV

Update: 2025-07-26 18:05 GMT

450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி...

286 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தூத்துக்குடி துறைமுகத்தில் 3 சரக்கு தளவாடங்களும் திறப்பு...

மொத்தம் 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி...

3 ரயில்வே உட்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு...

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழிப்பாதை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்பரிமாற்ற அமைப்பு தொடக்கம்...


இது ராமானுஜர் பூமி, திருவள்ளுவர் பிறந்த பூமி என மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு பேச்சு...

தமிழகம் அறிவியல், தியாகம் மற்றும் சேவையில் முன்னோடியாக திகழ்வதாக கருத்து...

இந்தியாவில் ஒவ்வொரு 50 நாட்களிலும் ஒரு புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேச்சு..

எந்த உலக நாடுகளும் செய்யாத சாதனையை இந்தியா செய்துள்ளதாக பெருமிதம்...

தூத்துக்குடி வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் நினைவு பரிசு..

வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவு பரிசாக வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு...


திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு...

தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கியதாக தகவல்...

பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணத்திற்கு எதிராக உள்துறை செயலாளருக்கு ராமதாஸ் கடிதம்...

தனது ஒப்புதல் இன்றி நடைபயணம் மேற்கொள்வதால், வட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்க வேண்டுகோள்...

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடக்கம்...

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் வீரராகவ ராவ் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்