மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-08-2025) | 6 PM Headlines | Thanthi TV

Update: 2025-08-26 13:24 GMT
  • ஆவணி மாத சுபமுகூர்த்த தினங்களில், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதலாக டோக்கன் வழங்கப்பட உள்ளன...பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது...11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10 முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
  • வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது...அடுத்த 2 நாட்களில், இது மேலும் வலுவடையக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது...
  • நடிகர் ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்...தன் சொத்துகள் முடக்கப்படவில்லை, தன் முன்பு தான் இருக்கிறது என நெகிழ்ச்சி தெரிவித்த ஜெயம் ரவி...
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமனை தொடர்புபடுத்தி பேச யூ டியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது...
  • கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சித்தராஜகண்டிகை அரசு பள்ளியில் 4 மாணவிகளுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது...

Tags:    

மேலும் செய்திகள்