மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.07.2025)

Update: 2025-07-13 12:57 GMT

டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ சுமார் 10 மணி நேரம் போராட்டத்திற்கு பின் முழுவதுமாக அணைப்பு...

தீ விபத்தில் சேதமடைந்த மின்கம்பிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்....

டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ சுமார் 10 மணி நேரம் போராட்டத்திற்கு பின் முழுவதுமாக அணைப்பு...

தீ விபத்தில் சேதமடைந்த மின்கம்பிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்....

"சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் தீ பற்றி விபத்து"...

3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே விளக்கம்...

திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்தில், 18 டேங்கர்களில் இருந்த 900 டன் கச்சா எண்ணெய் எரிந்து சேதம் அடைந்ததாக தகவல்...

விபத்து நடந்த வழித்தடத்தில் ரயில் சேவை படிப்படியாக தொடங்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்...

சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர், கோவை, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 8 ரயில்கள் ரத்து...

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய வெஸ்ட் கோஸ்ட் ரயில் திடீரென அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதி..

அரைமணி நேரத்திற்கு முன்பாக அறிவித்தால், எப்படி அரக்கோணம் செல்ல முடியும்? என வாக்குவாதம்..

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழியும் சூழலில் பயணிகள் அவதி...


மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது...

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் எனவும், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மருத்துவர் தின விழாவில் தமிழக சுகாதாரத்துறைக்கு ஆளுநர் ஆர்என் ரவி புகழாரம்...

தமிழ்நாடு, சுகாதாரத்துறையில் முன்னணியில் இருப்பதாகவும், மற்ற மாநிலங்கள் தமிழகத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பேச்சு...

திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

திருவள்ளூரிலிருந்து சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு...

திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என, அமைச்சர் நாசர் விளக்கம்...

தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாற்று இருப்பிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பேட்டி...

Tags:    

மேலும் செய்திகள்