Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.09.2025) | 1 PM Headlines | ThanthiTV
- இந்தியாவின் 15வது குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்...
- குடியரசு துணை தலைவரான மூன்றாவது தமிழர் என்ற பெருமையை சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்றார்...
- திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்திற்கு, ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்...
- கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள்12 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்...
- சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அரசு ஏசி பேருந்தை ஒடிசாவைச் சேர்ந்த நபர் திருடிச் சென்றார்...
- கன்னியாகுமரி மாவட்டம் பாலூரில் பிறந்து 42 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்த தாய் கைதாகினார்...
- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 30க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை, இரண்டு இளைஞர்கள் அடித்து நொறுக்கினர்...
- புதுச்சேரியில் சாலையோரம் நடந்து சென்ற சிறுமியை தெருநாய் கடித்துக் குதறியது...
- தாம்பரம் அருகே கஞ்சா போதையில் கையில் பட்டாக் கத்தியுடன் இளைஞர் ரகளையில் ஈடுபட்டார்...
- விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையத்தில் அரண்மனை கட்டித் தருவதாக கூறியதை நம்பி, பெண் ஒருவர் ஐந்து கோடி ரூபாயை பறிகொடுத்தார்...
- திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையிலான பிரச்சினையில் சமசரம் ஏற்பட்டுள்ளது...