Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (08-10-2025) | 11AM Headlines | Thanthi TV
- பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார்... தனி விமானம் மூலம் மும்பையில் தரையிறங்கிய நிலையில், மகாராஷ்டிர ஆளுநர், முதல்வர், துணை முதல்வர்கள் வரவேற்றனர்...
- டெல்லியில் 9வது மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்...இந்தியாவின் கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கப்படும் இந்த மாநாட்டில், 400க்கும் மேற்பட்ட தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன...
- காசா இனப்படுகொலையை கண்டித்து சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எழும்பூரில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்...
- விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டு, தவெகவினர் டிஜிபியை சந்திக்க உள்ளதாக, அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்... கரூரில் உயிரிழந்த 33 பேரின் உறவினர்களிடம் வீடியோ கால் மூலம் விஜய் பேசி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்...
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பாமக நிறுவனர் ராமதாஸிடம், விசிக தலைவர் திருமாவளவன் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்...ராமதாஸ் முழுமையாக நலம்பெற வேண்டும் என விரும்புவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்...