Today Crime News | வேலியே பயிரை மேய்ந்த கதை.. திருடனாக மாறிய போலீஸ் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..

Update: 2025-10-16 10:59 GMT

Today Crime News | வேலியே பயிரை மேய்ந்த கதை.. திருடனாக மாறிய போலீஸ் - மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.. இன்றைய பரபரப்பு

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் டோன் நகரில் போலீஸ் கான்ஸ்டபிளே கொள்ளையனாக மாறிய சம்பவம் வேலியே பயிரை மேய்ந்த கதையாகி உள்ளது. மெடிக்கலில் அமர்ந்து ஒரு பெண் ஊழியர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளார். அப்பெண் கூச்சலிடவே பொதுமக்கள் திருடனை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். போலீசார் விசாரணையின் போதுதான் அந்த நபர் பெயர் ஈஸ்வர் என்பதும் அவரே ஒரு கான்ஸ்டபிள் என்பதும் தெரிய வந்தது. அத்துடன் மதுவுக்கு அடிமையான ஈஸ்வரன் பல மாதங்களாக வேலைக்கு செல்லாமல் திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. ஈஸ்வரனை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்