"பக்தர்களை பாதுகாக்க..." திருப்பதி தேவஸ்தானம் முக்கிய முடிவு

Update: 2025-05-28 07:10 GMT

திருப்பதியில் சிறுத்தைகளிடமிருந்து பக்தர்களை பாதுகாக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், வனத்துறை அதிகாரி, உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் நடைபெற்றது. இதில் பக்தர்களை பாதுகாக்க சிறுத்தைகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நடைபாதையின் இரு புறங்களிலும் உயிர்வேலி அமைப்பது, ஹை பீம் டார்ச் லைட்டுகள், மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்கு வசதியாக பெப்பர் ஸ்ப்ரே பாட்டில்களை தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்