தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | TN Weather | Heat Wave
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 21ஆம் தேதி வரை இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடனும், காலை வேளையில் லேசான பனிமூட்டமும் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.