திடீரென பிரேக் பிடிக்காததால் வாய்க்காலில் தொங்கிய அரசு பேருந்து.. பயணிகளின் நிலை என்ன?
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு சொகுசு பேருந்து விபத்தில் சிக்கியது. குமாரக்குடி வளைவுபால பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயன்ற போது பிரேக் பிடிக்காததால் 30 அடி ஆழமுள்ள வாய்க்கால் கரையில் பேருந்து சரிந்து விட்டது. இதில் நல்வாய்ப்பாய் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்