TN School Leave | பள்ளிகள் காலாண்டு விடுமுறை | வெளியான முக்கிய அறிவிப்பு
காலாண்டு தேர்வு முடிவு - விடுமுறையில் பள்ளிகள் செயல்பட்டால் நடவடிக்கை
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வந்த காலாண்டு தேர்வுகள் இன்றோடு முடிவடைகின்றன. இந்நிலையில் நாளை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை, 9 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறையாகவும், அக். 6 தேதி மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவின் படி, இந்த விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.