TN Rain | Rainfall | சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழை - அறுந்த மின் கம்பம்.. சாய்ந்த மரங்கள்
வாணியம்பாடியில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால், மின்கம்பிகள் மீது மர முறிந்து விழுந்ததில் மின்சாரம் பாதிக்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்ததால், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதியடைந்தனர். தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், பொதுமக்களின் உதவியோடு, முறிந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.