TN Govt | Diwali Bonus | தீபாவளி போனஸ் அறிவிப்பு

Update: 2025-10-16 03:22 GMT

தீபாவளிக்கு தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 5308 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 2024-25ம் ஆண்டுக்கான 10 முதல் 20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க 3 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்