TN Govt | Diwali | நெருங்கும் தீபாவளி - கொடுக்கப்பட்ட அனுமதி

Update: 2025-10-06 06:37 GMT

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 390 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்ட 6 ஆயிரத்து 578 விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பொருள் சட்டத்தின் படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்பே தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை கூறியுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகே பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்