சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்.. கேஷுவலாக நடந்து சென்ற நபர்
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். ரயில் நிலையத்திலிருந்து இறங்கி ரயில்வே தண்டவாளம் வழியாக அந்த பெண் வீட்டிற்கு சென்ற போது, திடீரென ஒரு நபர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இளம்பெண் கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பியோடிள்ளார். அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில்
வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.