திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மண் சரிவில் மலையில் இருந்து விழுந்த 40 டன் எடையுள்ள பாறையின், 2 பகுதிகள் உடைக்கப்பட்டன. திருச்சியை சேர்ந்த தனியார் பாறை வெடி வைத்து அகற்றும் குழுவினர், பாறையில் துளைகளை போட்டு உடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சைலன்ட் ராக் கிராக் என்ற வெடிபொருளை துளையில் நிரப்பி அதன் மூலம் பாறைகள் சிதறாமல் வெடிக்க வைக்கப்பட்டது. பிரம்மாண்ட பாறையின் 2 பகுதிகள் துண்டாகி விழுந்துள்ளன. மீதமுள்ள பாறையும் சிறு சிறு துண்டாக உடைத்து அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.