tiruvallur || பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல் கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
திருவள்ளூர் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்..
திருத்தணி ஜெ.ஜெ. ரவி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு படித்து வரும் மாணவி பள்ளிக்கு நடந்து சென்ற போது அவரை பைக்கில் பின்தொடர்ந்து சென்ற நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் வீரகநல்லூரை சேர்ந்த மோகன் என்பதும், அவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருவதும் தெரிய வந்தது.