Tiruttani Murugan Temple | திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை இவ்வளவு கோடியா?

Update: 2025-09-16 05:14 GMT

திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தேவர் மண்டபத்தில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதையடுத்து மொத்தம் 1 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரத்து 49 ரூபாய் பணம், எழுநூற்று முப்பத்து இரண்டு (732) கிராம் தங்கம் மற்றும் பதினாறு ஆயிரத்து முந்நூற்று முப்பது (16,330) கிராம் வெள்ளியை, பகதர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்