Private School Student | திருப்பூரில் பிரைவேட் ஸ்கூல் - 7th மாணவனுக்கு என்ன நடந்தது?
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 7ம் வகுப்பு மாணவனை தனியார் பள்ளி ஆசிரியர் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன், தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அருகில் உள்ள சக மாணவனிடம் பேசியதாக கூறி தமிழ் ஆசிரியர் கண்ணன் மாணவனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.