திருப்பூரில் மெடிக்கலில் மாத்திரை வாங்க வந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போயம்பாளையம் பகுதியில் உள்ள மெடிக்கலில் ரமேஷ் குமார் என்பவர் மாத்திரை வாங்கிக் கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.