ஒரே நேரத்தில் திரண்ட பெற்றோர்கள் திணறிய திருப்பூர் கடைவீதிகள்

Update: 2025-06-02 03:38 GMT

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டினர். அந்த வகையில், திருப்பூர் பெரிய கடை வீதிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் திரண்டதால் துணிக்கடைகளில் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. வாடிக்கையாளர்கள் அதிகரித்ததால் கடைக்காரர்கள் செய்வதறியாமல் கதவுகளை மூடி வியாபாரம் செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்