Tirupattur | தன் உடலில் வாழ முடியாததால் 7 உடலுக்குள் வாழப்போகும் மனிதர்..
விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
திருப்பத்தூர் மாவட்டம், சாமுடி தாலுகாவுக்குட்பட்ட அச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்த சின்னமுத்து என்பவர் கடந்த 10ம் தேதி காலை வழக்கம்போல் தனது நிலத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று திரும்பும்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். விபத்தில் மூளைச்சாவு அடைந்த சின்னமுத்துவின் இருதயம், சிறுநீரகம், கண்கள், கணையம், நுரையீரல் ஆகிய 7 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.