திருப்பதி லட்டு நெய் விவகாரம் - உ.பி. பக்கம் திரும்பிய CBI பார்வை

Update: 2025-06-07 06:26 GMT

திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நெய் வழங்கி வந்த போலே பாபா, வைஷ்ணவி, ஏ.ஆர். டெய்ரி உள்ளிட்ட நிறுவனங்கள் தரமற்ற நெய்யை போலி ஆவணங்களுடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நெய்யில் மிருக கொழுப்பு கலந்திருந்தது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த நிறுவனங்களை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சிபிஐ தலைமையிலான SIT குழு, கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கத் தடை கோரி நீதிமன்றத்தில் வாதிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்