ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மூன்று நாள் மல்யுத்த போட்டி நிறைவடைந்தது. ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்த மல்யுத்த போட்டியில், ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரில் இருந்து, மல்யுத்த பயிற்சி பெற்ற சுமார் 1,200 பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.
ஜம்மு காஷ்மீரில் இந்த மாத இறுதியில் நடக்கவிருக்கும் மூன்றாவது ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள, ஆர்வமுடன் காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.