செல்போன் மூலம் மிரட்டல்? மதுரை தூய்மைப்பணியாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2025-08-20 17:01 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில், மூன்றாவது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மயத்தை புகுத்தும் 152 வது அரசாணையை ரத்து செய்தல், பணி நிரந்தரம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம், மாற்று பணியாளர்களை நியமிப்பதாக, தூய்மை பணியாளர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்