வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல் மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என தமிழக டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இது போன்ற புகார்களை மோசடி வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து வீடியோவை அனைத்து ஊடகங்களிலும் வெளியிட்டு மோசடிகளை தடுக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.