இது "75" ரீயூனியன்.. மலரும் நினைவுகள்.. மகிழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்டனர். 1975–1976 களில் படித்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலேயே ஒன்று கூடினார்கள்.
தங்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வந்திருந்த அவர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்து ஆரத்தழுவி, பள்ளிக் காலத்தில் நிகழ்ந்த நினைவுகளை பேசி பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்தும், பரிசு வழங்கியும் கவுரவித்தனர்.