"இது எங்க ஆட்டோ ஸ்டாண்ட்" - ஊபர் டிரைவரை சுத்து போட்டு தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்

Update: 2025-08-27 02:13 GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே பேருந்து நிறுத்ததில் தனியார் கால் டாக்ஸி ஓட்டுநரை ஆட்டோ ஓட்டுநர் தாக்கிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் சாலையில் உள்ள சிஐடி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் Uber ஆட்டோ டாக்சியில் ஒருவர் சென்றுகொண்டிருந்தபோது, பெண்கள் ஆட்டோவை நிறுத்தி ஏற முயன்றனர்.

இதனை பார்த்து அங்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள், இது எங்க ஆட்டோ ஸ்டாண்ட் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

ஒருகட்டத்தில் கோபமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வீடியோ எடுத்த Uber டாக்சி ஓட்டுனரை தாக்கியதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்