Thiruvarur Couples | மகனின் கல்யாணத்தை நிறுத்த நினைத்த சித்தப்பா முகத்தில் கரியை பூசிய மணமகள்

Update: 2025-08-28 03:27 GMT

திருத்துறைப்பூண்டி வரம்பியம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தா. இவர் புதுக்கோட்டை மாத்தூரை சேர்ந்த சஞ்சய்குமார் என்பவரை ஏழு ஆண்டுகளாக காதலித்து வருகிறார். சமீபத்தில், இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்திற்கு முதல் நாள் சஞ்சையை, அவரது சொந்த சித்தப்பா முருகன் கடத்தியுள்ளார்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் சஞ்சய்குமார் மீட்கப்பட்டு, காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அமிர்தாவையும் அழைத்து, அங்கிருந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம் செய்து வைத்தனர். சஞ்சயின் சித்தப்பா முருகனுக்கு, அமிர்தா சார்ந்த சமூகம் பிடிக்கவில்லை என்பதற்காக இந்த கடத்தல் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்