Thiruvannamalai | ``நீங்கள் யார்? நீங்கள் எதற்கு தலையீடுகிறீர்கள்'' - திடீரென டென்ஷனான நீதிபதி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆய்வின்போது, குறுக்கிட்டுப் பேசிய திமுக முன்னாள் நகர மன்றத் தலைவரை நீதிபதிகள் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலையார் கோயில் அருகில் வணிக ரீதியில் கடைகள் கட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், நீதிபதிகள் சுரேஷ் குமார், சௌந்தர் ஆகியோர், கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 8 கோடி ரூபாயில் காத்திருப்பு அறை கட்டப்படுவது குறித்து கோயில் ஆணையரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, முன்னாள் நகர மன்றத் தலைவர் ஸ்ரீதர் குறுக்கிட்டுப் பேசியனார். இதனால் கோபமடைந்த நீதிபதி சௌந்தர், நீங்கள் யார்? நீங்கள் எதற்கு தலையீடுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.