Thiruvannamalai || வைகாசி மாத பௌர்ணமி - கிரிவலப்பாதையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலையில் வைகாசி மாத பௌர்ணமியை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரும் சூழலில், கிரிவலப்பாதையில் நடைபெறும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, தூய்மைப் பணியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா? முறையாக சம்பளம் வருகிறதா? உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும், குப்பைகளை அகற்றும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.