ஊருக்குள் புகுந்த சிறுத்தை.. காட்டிக்கொடுத்த காலடி தடம் - நடுநடுங்கும் மக்கள் | Thiruvannamalai
ஊருக்குள் புகுந்த சிறுத்தை.. காட்டிக்கொடுத்த காலடி தடம் - நடுநடுங்கும் மக்கள் | Thiruvannamalai
போளூர் பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிசிடிவி கேமரா உதவியுடன் சிறுத்தையை தேடும் பணி தீவிரமாகியுள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பாடகம் காப்பு காட்டு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த நிலையில், சங்கர் என்பவர் விளைநிலத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுகுட்டியை காணவில்லை. கன்றுகுட்டியை தேடிய போது அங்கே சிறுத்தையின் கால் தடங்களை இறுப்பதை அறிந்தார். இதனை தொடர்ந்து போளூர் வன காவலர்களிடம் இது குறித்து புகார் அளித்தார். கால் தடத்தை ஆய்வு செய்த வனக்காவலர்கள், சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து பாடகம் காப்பு காட்டு பகுதியில் நேற்று இரவு சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதையும் உறுதி செய்தனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக, இரவு நேரங்களில் கிராம மக்கள் வெளியில் வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். தற்போது சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.