திருவண்ணாமலையில் ஆனி மாத பெளர்ணமியை முன்னிட்டு 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். 14 கிலோ மீட்டர் கிரிவல பாதையில் நடைபயணம் மேற்கொண்டு தங்களின் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர்.