பள்ளி சிறுவனை வெளியூருக்கு அழைத்து சென்று பலாத்காரம் - 2 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில், 16 வயதே ஆன, பள்ளி சிறுவனை வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது பெண் போக்சோவில் கைது செய்யப்பட்டார். மகனை காணவில்லை என பெற்றோர் அளித்த புகார் குறித்து விசாரித்த வந்த போலீசார், நீண்ட நாட்களுக்கு பிறகு இளம்பெண்ணிடம் இருந்து சிறுவனை மீட்டனர். இதையடுத்து 2 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்ணை போக்சோவில் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.