Thiruvallur | புறம்போக்கு நிலத்தில் விவசாயம் - பொக்லைன் எந்திரத்துடன் வந்த பொதுப்பணித்துறை..

Update: 2025-11-16 02:16 GMT

Thiruvallur | புறம்போக்கு நிலத்தில் விவசாயம் - பொக்லைன் எந்திரத்துடன் வந்த பொதுப்பணித்துறை.. அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரிய ஒபுளாபுரத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியை ஒட்டிய புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் நெல் பயிரிட்டிருப்பதாக தனிநபர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, பொக்லைன் எந்திரத்துடன் பொதுப் பணித் துறை அதிகாரிகள் சென்றபோது, அவர்களை வழிமறித்த விவசாயிகள் அறுவடை செய்யும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர், எந்திரங்களை சிறைப்பிடித்தும் வாக்குவாதம் செய்தனர். ஆனால், அவர்களை அப்புறப்படுத்தி விட்டு, எந்திரம் மூலம் அதிகாரிகள், பயிர்களை அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்