Thirupathur | Gold | வங்கியில் நகையை அடகு வைத்திருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2025-10-14 06:22 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை அடமானம் வைத்தவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.

வங்கிப்பணியாளர் மகேந்திரன் என்பவர் நகை மோசடியில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள், அடகு வைத்த நகைகளை திரும்பத் தருமாறு கூறி, கூட்டுறவு சார் பதிவாளர் கோகிலாவை முற்றுகையிட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்