Thirupathur | நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. ஏரியவையே நடுங்கவிட்ட சம்பவம் - பெண் சொன்ன தகவல்
பச்சூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர், லாரி வைத்து ஜல்லி விற்பனை செய்து வருகிறார். இவர் தனது மனைவியின் பெயரில் இருந்த சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை உறவினர்களுக்கு, சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு விற்று, அதில் தனக்கு இருந்த கடனை அடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள், பீரோவை உடைத்து இரண்டு சவரன் நகையை திருடியுள்ளனர். மேலும் சிவக்குமாரை தாக்கிவிட்டு அவரது மனைவி வாணியின் கழுத்தில் இருந்த எட்டு சவரன் தங்க தாலிச் சங்கலியையும் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.