திருநெல்வேலியில் 18 வயது இளைஞர் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மானூரை அடுத்த நரியூத்து காட்டு பகுதியில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்த 18 வயதான வெற்றி என்பது தெரியவந்தது. மேலும் உடலில் காயங்கள் இருப்பதால் வெற்றி கொலை செய்யப்பட்டாரா? என்ற அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.