திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை நடத்திய தமிழக அரசை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெகுவாக பாராட்டியுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தரிசனம் மேற்கொண்ட அவர், கடவுளே இல்லை என்று சொன்னவர்கள் கூட கடவுள் இருக்கிறார் என்று சொல்லும் சூழ்நிலையை முருகன் இந்த தமிழ் மண்ணிலே உருவாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.