ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அல்ட்ரா ஸ்கேன் மற்றும் ரேடியாலஜி உள்ளிட்டவை எடுப்பதற்கு 3 மணி நேரமாக காத்திருக்கும் அவல நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே, கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்டோரின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.