Theni School Student | 15 சத்து மாத்திரைகளை விழுங்கிய மாணவன் ஹாஸ்பிடலில் அனுமதி

Update: 2025-09-12 07:50 GMT

Theni School Student | 15 சத்து மாத்திரைகளை விழுங்கிய மாணவன் ஹாஸ்பிடலில் அனுமதி

15 சத்து மாத்திரைகளை விழுங்கிய மாணவன் - அதிர்ச்சி

ஆண்டிப்பட்டி அருகே தான் ஒல்லியாக இருப்பதாக நினைத்து, 15 சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவனால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அரசு மேல்நிலைபள்ளியில், 7 வகுப்பு படித்து வரும் மாணவன், தான் ஒல்லியாக இருப்பதாக நினைத்து பள்ளியில் கொடுக்கப்படும் சத்து மாத்திரைகளை, தனது நண்பர்களிடம் இருந்து சுமார் 15 க்கு மேற்பட்டவற்றை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சக மாணவர்கள், ஆசிரியரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, அவர் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்