Theni | Nmmk | விஜய்யுடன் கூட்டணியா? - ஒரே வார்த்தையில் அறிவித்த முக்கிய கட்சி
தேனி மாவட்டம் கம்பம் நகரில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களை நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். விழாவிற்கு முன்னதாக நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, முக்கிய தலைவர்கள் சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகரின் முக்கிய வீதியில் தனது கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொண்டர்களோடு ஊர்வலமாகச் சென்று விழா நடைபெறும் தனியார் திருமண மண்டபத்திற்கு வருகை புரிந்தனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ கட்சி கொள்கையை ஏற்றுக்கொள்ளும் கட்சியோடு கூட்டணி வைப்போம் எனவும், தூய நீர், தூய காற்று, தூயமண் இதுதான் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய கோட்பாடுகள் “ எனவும் கூறியுள்ளார்.