``கறிக்கடை குமார் கொலை'' - கஸ்டமர்களோடு சிரித்து பேசி பழகிய 2வது மனைவி -கொலையில் முடிவு
கோழிக்கடை வெச்சிருக்குற கணவருக்கு ஹெல்ப் பண்றதுக்காக பிஸினஸ்க்குள்ள வந்த மனைவி சில கஸ்டமர்கிட்ட நெருங்கி பழகி இருக்காங்க...
இதனால உறவுல விழுந்த விரிசல் கடைசில ஒரு கொலையில முடிஞ்சிருக்கு...
“கறிக்கடை குமார்ர யாரோ கொன்னுப் போட்டுட்டாங்க“ என்ற செய்தி அந்த ஏரியா முழுக்க காட்டு தீ மாதிரி பரவி இருக்கு...
தகவல் கிடைச்சு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சடலத்த கைப்பற்றி க்ரைம் ஸ்பாட்ட ஆராய்ஞ்சு இருக்காங்க.
குமாரோட கைகால்கள் பின்பக்கமா கட்டப்பட்டு இருந்திருக்கு.
அவரோட கழுத்துலயும் கயிறால இறுக்கி கொலை பண்ணதுக்கான தடயங்கள் இருந்ததால நடந்திருப்பது நிச்சயம் கொலை தான்னு போலீஸோட உள்ளுணர்வு சொல்லி இருக்கு.
சம்பவ இடத்துல கிடைச்ச தடயங்கள சேகரிச்ச போலீஸ் விசாரணைய தொடங்கி இருக்காங்க.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள எர்ரனஅள்ளி கிராமத்த சேர்ந்தவர் குமார்.
42 வயதான இவர் முதல் மனைவிய பிரிஞ்சி தனிமைல வாழ்ந்திருக்காரு.
இந்நிலையில சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு.. தன்னை போலவே கணவர்ர பிரிஞ்சு இரண்டு குழந்தைகளோட வாழ்ந்துட்டு வந்த கோவிந்தம்மாள் என்பவர்ர குமார் சந்திச்சு இருக்காரு. ரெண்டு பேரும் பேசி பழகி இருக்காங்க. அது நாம ஏன் சேர்ந்து வாழக்கூடாதுனு அவங்கள நினைக்க வெச்சிருக்கு.
அதோட விளைவு தான், திருமணம் செஞ்சிக்காமலயே ரெண்டு பேரையும் கணவன், மனைவிய வாழக்கூடிய சூழல்ல நோக்கி தள்ளி இருக்கு.
முதல் கணவர் மூலமா கோவிந்தம்மாளுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் குமார் தன்னோட சொந்த பிள்ளைகள மாதிரி பார்த்துகிட்டதாவும் சொல்லப்படுது.
மறுபடியும் life-அ ஸ்டார்ட் பண்ணவங்க பாலக்கோடு Bus Depo பக்கத்துலயே கோழிக்கடை வெச்சிருக்காங்க. அந்த கடைக்கு பின் பகுதிலயே தனியா வீடேடுத்து குடும்பமா வாழ்ந்து இருக்காங்க.
சம்பவம் நடந்த அதிகாலையில அந்த பகுதிவழியா வாக்கிங் போனவங்க கோழி கடை வாசல்ல குமார் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில சடலமா கிடந்ததா பார்த்து அதிர்ந்து போயிருக்காங்க. அவங்க கொடுத்த தகவலனின் பேர்ல தான் போலீஸும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு இருக்காங்க.
ஊருக்குள்ள குமாருக்கு சொல்லிக்கொள்ளும்படி எதிர்களோ... தொழிற்போட்டியோ கிடையாதுனு அக்கம்பக்கத்திலிருந்தவங்க தெரிவிச்சு இருக்காங்க. இதையடுத்து காவல்துறையினர் குமாரோட இரண்டாவது மனைவி கோவிந்தம்மாள் குறித்து விசாரிச்சு இருக்காங்க. அப்போ தான் கடைக்கு வரக்கூடிய கஸ்டமர் சிலர் கிட்ட கோவிந்தம்மாள் நெருங்கி பழகினதும், அதன்காரணமா ஏற்கனவே குமாருக்கும், கோவிந்தம்மாளுக்கும் அடிக்கடி சண்ட சச்சரவு நடந்திருப்பதும் தெரியவந்திருக்கு.
சந்தேகத்தின் பேர்ல கோவிந்தம்மாள்ள ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டு போன போலீஸ் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வராங்க...
கள்ளக்காதலுக்கு இடையூற இருந்த காரணத்தால குமார் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது கோவிந்தம்மாளோட முன்னாள் கணவருக்கும் நடந்த கொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா ? இப்படி பல கேள்விகள் எழுந்திருக்கு.
காவல்துறையினரோட முழுமையான இன்வஷ்டிகேஷனோட முடிவுல தான் குமார்ர யாரு கொலை பண்ணாங்கன்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும்.