Thiruchendur | திருச்செந்தூரில் இனி ரீல்ஸ் எடுத்தால்.. ரீல்ஸ் வெறியர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு

Update: 2025-11-20 02:57 GMT

"கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை"

திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்செந்தூர் கோயிலில் பெண் ஒருவர் நடனமாடி, ரீல்ஸ் எடுத்தது சர்ச்சைக்குள்ளான நிலையில் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில், கோயில் வளாகத்திற்குள் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்